மங்கிய மாலை வேளையில்
மதுக்கோப்பையுடன் நான்
மதுவின் வழியே கோப்பையின் அடியில்
தெரிகிறது முடிவு
முடிவை நோக்கிய பயணம்
தொடங்கும் முன்னே தடுத்தன
தோழர் கைகள்
சமமாய் பிரித்தனர் மதுவை
அளவாய் கலந்தனர் மிதநீர்
கலந்த மதுவில் கலங்கித் தெரிந்தன
எங்கள் அனைவர் உருவமும்
கலந்த தண்ணீர் அடைத்துக் கொண்டது
முடிவின் வழியை
அடைத்த வழியில் அழகாய் நிற்பது
அவர்கள் உருவம்
உருவம் பார்த்தே உரத்த குரலில்
முழக்கம் செய்தேன்
மதுவின் உள்ளே மிதநீர் கலந்தது
நானே என்று.
Archive for the 'Uncategorized' Category
புரிதல்
ஜூலை 29, 2007உன்னோடு பேசும் அபூர்வ வினாடிகள்
ஜூலை 9, 2007விரல்களை சேர்த்து உள்ளங்கை காட்டி
வரம் தரும் விஷ்ணு போல் நிற்கிறாய் – நான்
உள்ளங்கை மடக்கி உருவான ரேகை
வில்லங்கம் ஏதும் செய்யாமல் இருக்க – உன்
உருவத்தை வணங்க ஊரே சொல்கிறது.
உன் வார்த்தைகளை மட்டும் வாசிக்கத்
தருகிறாய் – அதன் மேல் அமர்ந்திருக்கும்
உன்னிலிருந்து வடியும் சேறு
உன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.
அறியாமையை அரியணை யாக்கி
அழகாய் அமர்ந்திருக்கிறாய் அரசனாக
காலியான உன் கபாலம்
கனமான கிரீடங்களைத் தாங்குவதால்
என் முட்கிரீடத்தின் வலி
உனக்குப் புரிவதில்லை.
இருந்தும்
உன்னை நான் விரும்பவே விரும்புகிறேன் – ஆனால்
என்னை நீ விரும்புவதாய் என்னை
ஏமாற்றிக் கொள்ள முடியாது.
பசுவைப் புனிதமென்று [...]
சீர்திருத்தப்பள்ளி
ஜூலை 3, 2007இந்த கசாப்புக்கடைக்குள்
நுழைந்த ரோஜாக்களின்
முட்கள் மட்டுமே
மீதம் இருக்கின்றன.
நிழலில் தொடரும் கறை.
ஜூன் 28, 2007முட்டா ளென்பர் என்னை மூட னென்பர்
தம் பேனா மைகொட்டும் மெய்சுட்டுப்
பொய்கட்டும் வீணரும் புண்ணாவதாய் புழுகுவர்
சுத்தப் பொய்களை சூடாக விற்கும்
மெத்தப் படித்த மேதாவிகள் சிலர்.
அவர்
வெட்டிய சத்தமும் – பின் அதில்
கொட்டிய ரத்தமும்
ஞாபகம் இருக்கையிலும்
மாண்ட மனிதனை மீண்டும் வணங்கிட
என்னை அழைக்கிறாய்.
வரமாட்டேன் என்றிருந்தும் விடவில்லை நீ
வரலாறு காட்டி வரவழைக்கப் பார்த்தாய்
மசியாமல் நான்சொன்ன வார்த்தைகள் கேட்டு
வாழ்க்கையைக் காட்டி பயமுறுத்திப் பார்த்தாய்.
பயந்த நான் புகுந்த இடம் புத்தகம்
நடுக்கம் நீங்க நாடியதோ பேனா
நான் ஓடிய தூரம் கொஞ்சம்
மீதி என்பேனா ஓடிய தூரம்
அதை மிஞ்சும்.
மூச்சுமுட்ட ஓடி வந்து
மூச்சு [...]
சுடுமீன்
மே 27, 2007முளைக்கின்ற வெள்ளி மீன்கள்
மூழ்காமல் நீந்தி நிற்கும்
அலைபாயும் கடலின் நடுவே
ஆயிரம் வலைகள் விரிய.
காலையில் பரிதி வரவும்
கருவிலே கலைந்து போகும்
சுடுமீன் கண் சிமிட்ட
இரவிலே வளர்ந்த கனவு.